There are 79 blogs and 158 users running on this server.




த‌மிழ்99 இனி அட‌டாவிலும்!

Blogged under அடடா, அறிவிப்பு by skcsknathan001 on Sunday 29 June 2008 at 10:06 pm

வ‌ண‌க்க‌ம் அட‌டா வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளே.

த‌மிழ்99 த‌ட்ட‌ச்சு முறை மிக‌வும் வேக‌மாக‌ இணைய‌த்தில் ப‌ர‌வி வ‌ருவ‌தால், அட‌டா இலும் த‌மிழ்99 த‌ட்ட‌ச்சு முறையை சேர்த்திருக்கிறோம்.

இது வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌. சாதார‌ண‌மாக‌ உங்க‌ள் வ‌லைப்ப‌திவிற்கு வ‌ரும் ப‌ய‌ன‌ர்க‌ளும் த‌மிழ்99 முறையில் த‌ட்ட‌ச்ச‌லாம்.

மேலே உள்ள‌ bar இல் த‌மிழ்99/ Tamil99 என்னும் புதிய‌ வ‌கையை நீங்க‌ள் காண‌லாம்.

நீங்க‌ள் வ‌லைப்ப‌திவாள‌ர் என்றால் இய‌ல்நிலை த‌ட்ட‌ச்சு முறை [default keyboard] ஐ தெரிவுசெய்ய‌ த‌ட்ட‌ச்சு ஐ சொடுக்குக‌.

ந‌ன்றி
அட‌டா நிர்வாக‌ம்

பொங்கல் வாழ்த்து!

Blogged under அடடா, அறிவிப்பு by skcsknathan001 on Sunday 14 January 2007 at 4:12 pm

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு அடடா இன் பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஏற்கனவே அறிவித்திருந்தது போல், அடடா ஐத் தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன்.

அடடா பொங்கல் வாழ்த்து!

அடடா வின் இறுதி 10 இடுகைகள்

Blogged under அடடா, அறிவிப்பு by capitalz on Wednesday 20 December 2006 at 3:10 pm

இனிமேல் அடடா இல் பதியப்பட்ட இறுதி 10 இடுகைகளை உங்கள் வலைப் பதிவில் இடலாம்.

உங்கள் நடத்துனர் பக்கத்தில் [Presentation ==> Sidebar Widgets] ஏற்கனவே இருக்கும் “Adadaa Recent Posts” என்னும் widget அகற்றப்பட்டு விட்டது. இதற்குப் பதிலாக இப்போது நீங்கள் RSS widget இல் http://adadaa.com/full-feed/ என்னும் முகவரியை அடியுங்கள். அடடா வலைப் பதிவர்களின் இறுதி 10 இடுகைகள் காண்பிக்கப்படும்.

அடடா வின் இந்த இறுதி இடுகைகளை வலைப் பதிவில் மட்டுமின்றி உங்கள் இடுகைகள் திரட்டி வாசிக்கும் இடங்களிலும் பார்வையிடலாம். அதே இணைய முகவரியைப் பயன்படுத்தவும்.

உ+ம்: Google Reader இல் Add subscription ஐத் தட்டி http://adadaa.com/full-feed/ என்ற முகவரியை இடவும். அடடா வில் இடப்பட்ட இறுதி இடுகைகளை நீங்கள் காணலாம்.

அடடா அறிவிப்பு, உதவி

Blogged under அடடா, அறிவிப்பு by skcsknathan001 on Friday 8 December 2006 at 11:28 pm

அடடா விற்கான சோதனைத் தளத்தை உருவாக்கியாகிவிட்டது. இனி பல புதிய செயற்பாடுகளை உங்கள் வலைப் பதிவில் பார்க்ககூடியதாக இருக்கும்.

முதல் கட்டமாக, அடடா வில் புதிதாக வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் உங்கள் “Dashboard” பகுதியில் “Adadaa aRivippu” என்னும் தலைப்பின் கீழ் தோன்றும்.

அதே போல், அடடா வலைப் பதிவு தொடர்பான தொழில்நுட்ப மேம்படுத்தல்கள், விளக்கக் கட்டுரைகள், உதவி இடுகைகள் என்பன போன்ற விபரங்கள் “Adadaa uthavi” என்னும் தலைப்பின் கீழ் தோன்றும். நீங்களும் ஏதாவது அடடா வலைப் பதிவு/ WordPress சம்பந்தமான விபரக் கோவை எதாவது எழுதிப் பிரசுரித்தீர்களானால், அடடா விற்கு அறியத்தரவும். உங்கள் இடுகைக்கான தொடுப்பு அடடா உதவி இல் சேர்க்கப்படும்.

 

Bad Behavior has blocked 5 access attempts in the last 7 days.