தமிழ்99 இனி அடடாவிலும்!
வணக்கம் அடடா வலைப்பதிவாளர்களே.
தமிழ்99 தட்டச்சு முறை மிகவும் வேகமாக இணையத்தில் பரவி வருவதால், அடடா இலும் தமிழ்99 தட்டச்சு முறையை சேர்த்திருக்கிறோம்.
இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமல்ல. சாதாரணமாக உங்கள் வலைப்பதிவிற்கு வரும் பயனர்களும் தமிழ்99 முறையில் தட்டச்சலாம்.
மேலே உள்ள bar இல் தமிழ்99/ Tamil99 என்னும் புதிய வகையை நீங்கள் காணலாம்.
நீங்கள் வலைப்பதிவாளர் என்றால் இயல்நிலை தட்டச்சு முறை [default keyboard] ஐ தெரிவுசெய்ய தட்டச்சு ஐ சொடுக்குக.
நன்றி
அடடா நிர்வாகம்
இவ்வசதியைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சோதித்த வரை வழுக்கள் ஏதும் இல்லை. வாழ்த்துகள்.
இந்த வசதியை எப்படிச் செய்கிறீர்கள்? தமிழ்த் தட்டச்சுக்கான நிரலை நீட்சியாக வெளியிட்டால் அனைவரும் பயன்பெறலாம்.
நன்றி.
தமிழில் நேரடியாக தட்டச்சுதல் அடடாவில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆன சலுகை. மன்னிக்க வேண்டும்.
ஆனால், ஏற்கனவே இணையத்தில் இருந்த வேர்ட்பிறஸ் இற்கான தேன்கூடு கருவிப்பட்டையை [Thamizmanam WP Plugin by Kannan Ramanathan], நான் சற்று மேன்மைப்படுத்தி வெளியிட்டிருக்கிறேன். இங்கே பெற்றுக்கொள்ளலாம்.